கல்வி என்றால் என்ன?
இந்த உலகில் ஒருவர் பெறுகிற அறிவு,அனுபவம்,ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பு= கல்வி எனப்படும்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை கல்வியில் சாதி,குலம்,வர்ணம்,ஏழை,பணக்காரன்,என்பவை உள்நுழைந்து கற்பவருக்கும்=கற்பிப்பவருக்கும் அதாவது ஆசிரியருக்கும் இடையில் ஒரு பெரிய தடையினை உருவாக்கியது.ஒரு பிரிவினர் ஓரங்கட்டப்பட்டனர்.ஒரு சிலருக்குக் கல்வி எட்டாக்கனியானது.ஆனால் இந்த நவீன காலத்தில் நாகரீகம் வளர,வளர மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் தந்தை பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள்,தொழில் நுட்பச் செறிவு,சுருங்கிப்போன உலகம்,பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகள் சமூகத்தினரிடையே உள்ள ஏற்ற,தாழ்வுகளை உடைத்தெறிந்து வருவது மட்டுமின்றி கல்வி என்பதற்கான கருத்துருக்களை வெகுவாக மாற்றிக்கொண்டு வருகின்றன.
அதே சமயத்தில் இன்றைய சூழலில் அறிவு நுட்பத்திற்கான அடித்தளமாக இருந்த கல்வி பொருள் ஈட்டுகிற,வணிகத்திற்கான படிக்கட்டுகளாக மாறியுள்ளன.பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்றவாறு கல்வியானது பல்வேறு கோணங்களில் வடிவமைக்கப்பட்டு,பொருள்வழி பெறுகின்ற வணிகப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது.ஆசிரியர்களும் ( வேறு வழியின்றி ) விற்பனையாளர்களாக மாறி வருகின்றனர். இடைத்தரகர்களும் ஆசிரியர்களைக் கூலிக்கு அமர்த்தி விளம்பரம் செய்து நாடு முன்னேற முக்கிய காரணியான கல்வியினை அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் கல்வியினை வியாபாரப் பொருளாக்கி விற்பனையைக் கூட்டுகின்றனர்.அரசுப்பள்ளிகளில் கொடுக்கப்படும் கல்வியின் தரம் குறைந்ததாக ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கியுள்ளனர்.{ இதன் போக்கை திருப்புவதற்காகவே நமது ஈரோடு மாவட்ட மரியாதைக்குரிய ஆட்சியர் அவர்கள் அவரது மகளை குமலன்குட்டை அரசு ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்ததோடு மட்டுமின்றி இலவச மதிய உணவும்,இலவச சீருடையும் தம் மகளுக்குக் கொடுக்க பெற்றோர் என்ற இடத்தில் நின்று விண்ணப்பம் கொடுத்துள்ளார்.ஆட்சியர் அவர்களைப் பின்பற்றி நாமும் அரசுப் பள்ளியில் நமது குழந்தைகளைச் சேர்த்து அரசின் நலத்திட்டங்களை,இலவசக் கல்வியினைப் பெறச் செய்வோம்.}

No comments:
Post a Comment