Search This Blog

Monday, 27 June 2011

7)முக்கிய ஊர்களுக்கு இடையேயான தூரங்கள் என்ன?

அ) சத்தியிலிருந்து ஈரோடு = 60 கி.மீ.
       சத்தி-கோபி =       25 கி.மீ.
       கோபி - கவுந்தப்பாடி = 14கி.மீ.
     கவுந்தப்பாடி - சித்தோடு =12 கி.மீ.
      சித்தோடு -ஈரோடு =09 கி.மீ.
   


  ஆ)சத்தியிலிருந்து  கோயமுத்தூர்=69கி.மீ.
         சத்தி -புளியம்பட்டி =21கி.மீ.
        புளியம்பட்டி- பொங்களூர்= 06 கி.மீ.
       பொங்களூர்-அன்னூர்=10கி.மீ.
       அன்னூர்-கோவில் பாளையம் =13கி.மீ.
        கோவில்பாளையம்-கோவை =19கி.மீ.

   இ) சத்தியிலிருந்து மேட்டுப்பாளையம் = 53கி.மீ.
                சத்தி-பவானிசாகர்=19 கி.மீ.
              பவானிசாகர்-பெத்திக்குட்டை=14கி.மீ.
              பெத்திக்குட்டை-சிறுமுகை = 10கி.மீ.
                சிறுமுகை - மேட்டுப்பாளையம் =10 கி.மீ.

     ஈ) சத்தியிலிருந்து திருப்பூர் =56 கி.மீ.
        சத்தி-புளியம்பட்டி =21கி.மீ.
       புளியம்பட்டி-லூர்துபுரம்=07கி.மீ.
        லூர்துபுரம்-சேவூர்=07 கி.மீ.
       சேவூர்-அவினாசி =08கி.மீ.
        அவினாசி-திருப்பூர்=13 கி.மீ.

    உ)சத்தியிலிருந்து மேட்டூர் = 80கி.மீ.
      சத்தி-பங்களாப்புதூர்=18கி.மீ.
      பங்களாப்புதூர்-கள்ளிப்பட்டி=06கி.மீ.
    கள்ளிப்பட்டி-அத்தாணி=07கி.மீ.
   அத்தாணி-அந்தியூர்=09கி.மீ.
   அந்தியூர்-அம்மாபேட்டை= 19கி.மீ.
    அம்மாபேட்டை-மேட்டூர்=80கி.மீ.

    ஊ) சத்தியிலிருந்து  தாளவாடி=63கி.மீ.
      
    சத்தி-பண்ணாரி=14கி.மீ
    பண்ணாரி-திம்பம்=13கி.மீ.
   திம்பம்-ஆசனூர்=09கி.மீ.
   ஆசனூர்-காரப்பள்ளம்=07கி.மீ.
  காரப்பள்ளம்-புளிஞ்சூர்=05கி.மீ.
  புளிஞ்சூர்-கோழிப்பாளையம்=05கி.மீ.
  கோழிப்பாளையம்-தாளவாடி=10கி.மீ.

  எ)சத்தியிலிருந்து கொள்ளேகால்=124கி.மீ.
  சத்தி-பண்ணாரி=14கி.மீ.
 பண்ணாரி-திம்பம்=13கி.மீ.
  திம்பம்-அரேபாளையம்=04கி.மீ.
  அரேபாளையம்-கேர்மாளம்=26கி.மீ.
   கேர்மாளம்-ஒடையார்பாளையம்=11கி.மீ.
   ஒடையார்பாளையம்-நொக்கனூர்=22கி.மீ.
   நொக்கனூர்-ஹனூர்=10கி.மீ.
  ஹனூர்-காமகரை=10கி.மீ.
  காமகரை-கொள்ளேகால்=15கி.மீ.

ஏ) சத்தியிலிருந்து மைசூர்=141கி.மீ.
     சத்தி-பண்ணாரி=14கி.மீ.
   பண்ணாரி-திம்பம்=13கி.மீ.
  திம்பம்-ஆசனூர்=09கி.மீ.
   ஆசனூர்-புளிஞ்சூர்=12கி.மீ.
  புளிஞ்சூர்-தாளவாடிப் பிரிவு=06கி.மீ.
  தாளவாடிப் பிரிவு-சாம்ராஜ் நகரம்=27கி.மீ.
 சாம்ராஜ் நகரம்-நஞ்சன் கூடு=35கி.மீ.
நஞ்சன்கூடு-மைசூர்=25கி.மீ.

 ஐ)சத்தியிலிருந்து கடம்பூர் வழி கேர்மாளம்செக்போஸ்ட்=75கி.மீ.(கேர்மாளம் செக்போஸ்ட்-ஆசனூர்=29கி.மீ.)
  சத்தி-நால்ரோடு=06கி.மீ.
நால்ரோடு-K.N.பாளையம்=05கி.மீ.
 கெ.நா.பாளையம்-கடம்பூர்=17கி.மீ.
 கடம்பூர்-இருட்டிப்பாளையம்=05கி.மீ.
இருட்டிப்பாளையம்-பசுவனாபுரம்=04கி.மீ.
பசுவனாபுரம்-அணைக்கரை=07கி.மீ.
 அணைக்கரை-கோட்டாமாளம்=08கி.மீ.
கோட்டாமாளம்-சுஜில்கரை=04கி.மீ.
சுஜில்கரை-காடுபசுவனாபுரம்=04கி.மீ.
காடுபசுவனாபுரம்-காடட்டி=04கி.மீ.
காடட்டி-பூதாளபுரம்=05கி.மீ.
பூதாளபுரம்-கேர்மாளம் செக்போஸ்ட்=06கி.மீ.
கேர்மாளம்செ.போ.-கெத்தேசால்=09கி.மீ.
கெத்தேசால்-மாவள்ளம் பிரிவு=08கி.மீ.
மாவள்ளம் பிரிவு-அரேபாளையம்=09கி.மீ.
அரேபாளையம்-ஆசனூர்=03கி.மீ.

ஒ) சத்தியிலிருந்து  சென்னை=467கி.மீ.
    சத்தி-ஈரோடு=60கி.மீ.
   ஈரோடு-சங்ககிரி=25கி.மீ.
  சங்ககிரி-மகுடஞ்சாவடி=16கி.மீ.
மகுடஞ்சாவடி-சேலம்=25கி.மீ.
சேலம்-அயோத்தியாபட்டணம்=15கி.மீ.
அயோத்தியாபட்டணம்-வாழப்பாடி=19கி.மீ.
வாழப்பாடி-ஆத்தூர்=24கி.மீ.
ஆத்தூர்-வி.கூட்டுரோடு=24கி.மீ.
வி.கூட்டுரோடு-சின்னச்சேலம்=09கி.மீ.
சின்னசேலம்-கள்ளக்குறிச்சி=15கி.மீ.
கள்ளக்குறிச்சி-உளுந்தூர்பேட்டை=35கி.மீ.
உளுந்தூர்பேட்டை-கெடிளம்=14கி.மீ.
கெடிளம்-விழுப்புரம்=24கி.மீ.
விழுப்புரம்-திண்டிவனம்=37கி.மீ.
திண்டிவனம்-மேல்மருவத்தூர்=32கி.மீ.
மேல்மருவத்தூர்-மதுராந்தகம்=10கி.மீ.
மதுராந்தகம்-செங்கல்பட்டு=25கி.மீ.
செங்கல்பட்டு-தாம்பரம்=32கி.மீ.
தாம்பரம்-சென்னை=26கி.மீ.

 ஓ)சத்தியிலிருந்து பெங்களூரு=269கி.மீ.
சத்தி-பண்ணாரி=14கி.மீ.
பண்ணாரி-திம்பம்=13கி.மீ.
திம்பம்-ஆசனூர்=09கி.மீ.
ஆசனூர்-புளிஞ்சூர்=12கி.மீ.
புளிஞ்சூர்-தாளவாடிப் பிரிவு=06கி.மீ.
தாளவாடிப் பிரிவு-சாம்ராஜ நகரம்=27கி.மீ.
சாம்ராஜ நகரம்-கொள்ளேகால்=37கி.மீ.
கொள்ளேகால்-பெங்களூரு=151கி.மீ.

ஔ) சத்தியிலிருந்து நகரம்வழி குண்டல்பேட்டை=114கி.மீ.
சத்தி-பண்ணாரி=14கி.மீ.
பண்ணாரி-திம்பம்=13கி.மீ.
திம்பம்-ஆசனூர்=09கி.மீ.
ஆசனூர்-புளிஞ்சூர்=12கி.மீ.
புளிஞ்சூர்-தாளவாடி பிரிவு=06கி.மீ.
தாளவாடி பிரிவு-சாம்ராஜ நகர்=27கி.மீ.
சாம்ராஜ நகர்-குண்டல்பேட்டை=33கி.மீ.

க) சத்தியிலிருந்து ஊட்டி வழி  குண்டல்பேட்டை=215கி.மீ.(மைசூர்=325கி.மீ.)
சத்தி-பவானிசாகர்=19கி.மீ.
பவானிசாகர்-சிறுமுகை=24கி.மீ.
சிறுமுகை-மேட்டுப்பாளையம்=10கி.மீ.
மேட்டுப்பாளையம்-குன்னூர்=33கி.மீ.
குன்னூர்-ஊட்டி=24கி.மீ.
ஊட்டி-கூடலூர்=56கி.மீ.
கூடலூர்-குண்டல்பேட்டை=54கி.மீ.
குண்டல்பேட்டை-நஞ்சன்கூடு=85கி.மீ.
நஞ்சன்கூடு-மைசூர்=25கி.மீ.

Friday, 24 June 2011

6) இலவசக் கணினி - தமிழ்நாடு அரசு

அன்பு நண்பர்களே,வணக்கம்.
              இன்றைய சூழலில் கல்வி கற்கும் அனைத்து தரப்பு மாணவ,மாணவியருக்கும்   தமிழ்நாடு அரசிடமிருந்து கணினி  இலவசமாகக் கிடைக்கும் போல் உள்ளது. இந்த இலவசத் திட்டம் அனைவரும் பல விசயங்களை அறிந்து கொண்டு முன்னேற்றம் அடைய வழிவகுக்கும் .இவ்வாறு கிடைக்கும்பட்சத்தில் பெற்ற கணினியினை நல்ல ஆரோக்கியமாகப் பயன்படுத்துவது அதுவும் எளிய தமிழில்,மாணவ,மாணவியர்  பயன்படுத்தி முன்னேற்றம் காணும்விதமாக உதவும் விதத்தில் கேள்விபதில்- kelvipathil.blogspot.com என்ற வலைப்பதிவு கோபி கலை & அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ,ஈரோடு கலை& அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் மரியாதைக்குரிய நா.மணி ஆகியோரது ஆதரவுடன் துவங்கப்பட்டுள்ளது.அனைவரும் பங்கேற்று முன்னேற்றம் காணுவோமாக.இதனால் நாமும் முன்னேற்றமடைந்து நமது நாட்டையும் முன்னேற்றப்பாதையில் வழிநடத்திச் செல்வோமாக.
       kelvipathil.blogspot.com
   HONEYBEES SOCIAL ORGANIZATION (SATHY & THALAVADI)

5)போக்கு வரத்து என்றால் என்ன? அதன் விதிமுறைகள் என்ன?

 போக்குவரத்து என்பது ஆதிகாலத்தில் கால்நடையில் துவங்கி இன்று

4) கல்வி என்றால் என்ன? இன்றைய நிலை என்ன?

     கல்வி என்றால் என்ன?
            இந்த உலகில் ஒருவர் பெறுகிற அறிவு,அனுபவம்,ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பு= கல்வி எனப்படும்.
          சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை கல்வியில் சாதி,குலம்,வர்ணம்,ஏழை,பணக்காரன்,என்பவை உள்நுழைந்து கற்பவருக்கும்=கற்பிப்பவருக்கும் அதாவது ஆசிரியருக்கும் இடையில் ஒரு பெரிய தடையினை உருவாக்கியது.ஒரு பிரிவினர் ஓரங்கட்டப்பட்டனர்.ஒரு சிலருக்குக் கல்வி எட்டாக்கனியானது.ஆனால் இந்த நவீன காலத்தில் நாகரீகம் வளர,வளர மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் தந்தை பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள்,தொழில் நுட்பச் செறிவு,சுருங்கிப்போன உலகம்,பொருளாதார வளர்ச்சி போன்ற காரணிகள் சமூகத்தினரிடையே உள்ள ஏற்ற,தாழ்வுகளை உடைத்தெறிந்து வருவது மட்டுமின்றி கல்வி என்பதற்கான கருத்துருக்களை வெகுவாக மாற்றிக்கொண்டு வருகின்றன.
      அதே சமயத்தில் இன்றைய சூழலில் அறிவு நுட்பத்திற்கான அடித்தளமாக இருந்த கல்வி பொருள் ஈட்டுகிற,வணிகத்திற்கான படிக்கட்டுகளாக மாறியுள்ளன.பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்றவாறு கல்வியானது பல்வேறு கோணங்களில் வடிவமைக்கப்பட்டு,பொருள்வழி பெறுகின்ற வணிகப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது.ஆசிரியர்களும் ( வேறு  வழியின்றி ) விற்பனையாளர்களாக மாறி வருகின்றனர். இடைத்தரகர்களும் ஆசிரியர்களைக் கூலிக்கு அமர்த்தி விளம்பரம் செய்து  நாடு முன்னேற முக்கிய காரணியான கல்வியினை அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் கல்வியினை வியாபாரப் பொருளாக்கி விற்பனையைக் கூட்டுகின்றனர்.அரசுப்பள்ளிகளில் கொடுக்கப்படும் கல்வியின் தரம் குறைந்ததாக ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கியுள்ளனர்.{ இதன் போக்கை திருப்புவதற்காகவே நமது ஈரோடு மாவட்ட மரியாதைக்குரிய ஆட்சியர் அவர்கள் அவரது மகளை குமலன்குட்டை அரசு ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்ததோடு மட்டுமின்றி இலவச மதிய உணவும்,இலவச சீருடையும் தம் மகளுக்குக் கொடுக்க பெற்றோர் என்ற இடத்தில் நின்று விண்ணப்பம் கொடுத்துள்ளார்.ஆட்சியர் அவர்களைப் பின்பற்றி  நாமும் அரசுப் பள்ளியில் நமது குழந்தைகளைச் சேர்த்து அரசின் நலத்திட்டங்களை,இலவசக் கல்வியினைப் பெறச் செய்வோம்.}

3)வழிகாட்டல் என்றால் என்ன?

  3) வழிகாட்டல் என்றால் என்ன? எதற்காக வழிகாட்டல் தேவைப்படுகிறது?
       
            வழிகாட்டல் என்பது குறிப்பிட்ட வயதில் முடிக்கக்கூடிய எல்லைப்பரப்பு அல்ல.தனியாளின் வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து வரக்கூடிய தொடர்ச்சியான செயல்முறையாகும்.
            ஆசிரியர் மற்றும் பெற்றோர்,நண்பர்கள்,சுற்றத்தார் ஆகிய அனைவரும் வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளில் இருப்பவர்கள் ஆவர்.
     சில நேரங்களில் அறிவுரை கூறுபவர்,உடலியல் நிபுணர்,உளவியல் அறிஞர்,மனவியல் நிபுணர்,பாடத்திட்ட வல்லுனர்,தொழில் வழிகாட்டுபவர், போன்ற சிறப்பு நிபுணர் தேவைப்படுகின்றனர்.
     இன்றைய உலகம் தற்போது மிகச் சிக்கல் வாய்ந்ததாக உள்ளது.எனவே, இன்றைய இளைஞர்கள் தங்களது வாழ்க்கையில் கல்வி,தொழில் மற்றும் தனிப்பட்ட நிலைகளில் ஒவ்வொரு படியிலும் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். கல்வி மற்றும் தொழில் சார்ந்த அமைப்புகள் நேரத்திற்கு நேரம் மாறக்கூடியது.தொழில் அமைப்புகள், அறிவியல் மற்றும்தொழில் நுட்ப உபயோகங்கள்,நாட்டின் பொருளாதார அமைப்புகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது.நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வரும் வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகளில் எது தனக்கு பொருத்தமானது என்பதை அறிந்து தேர்ந்தெடுக்க தடுமாறுகின்றனர் இன்றைய இளைஞர்கள்.வேலை வாய்ப்புகள் நிறைய அளவில் இருந்தாலும் வேலைகள் தவறான வழியில் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இதனால் மனித வளம் வீண்டிக்கப்படுவதுடன் நாட்டின் முன்னேற்றம் தடைபடுகின்றது. எனவேதான் என்பது இன்றைய சூழலில் அவசியம் வழிகாட்டல் என்பது தேவைப்படுகிறது.வழிகாட்டலின் முதன்மையான நோக்கமே மாணவர்களின் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்புகளில்தேர்ச்சி பெற்று ஒரு குறிப்பிட்ட தொழிலுக்கு அந்த மாணவர்களைத் தயார் செய்து அந்தத் தொழிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே ஆகும்.சமூகம் மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்கேற்றவாறு தொழிலைத் தேர்ந்தெடுக்க தொழில் பற்றிய விபரங்கள் அவசியமாகிறது. மேலும்,தன் திறமை,செயலாற்றல்,நாட்டம்,மனப்பான்மை,விருப்பம் ஆகியவற்றுக்குத் தகுந்தவாறு மிகச் சரியான தொழிலை அல்லது வேலையைத் தேர்ந்தெடுக்கவும் தொழில் அல்லது வேலை பற்றிய தகவல் மற்றும் வழிகாட்டல் மிக அவசியமாகிறது.
         நாட்டில் அறிவியல்,பொருளாதார மற்றும் தொழில் அமைப்புகள் நாளுக்கு நாள் மாறிக் கொண்டே இருக்கிறது.இயற்கை மற்றும் தொழில் தேவைகளின் விளைவாக ஒருவரது தேவைகள் மாறுபடுகின்றன.தற்போதைய நாகரீக வளர்ச்சி மற்றும் சூழ்நிலையும் தேவைகளைக் காரணிப்படுத்துகிறது.அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தொழிற்சாலை மேம்பாடு இவைகளினால் பல வேறுபாடுகளைக் கொண்ட புதுப்புது வேலை வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.ஒரு வேலை பற்றிய வளர்ச்சியும், முன்னேற்றமும் இன்றைய சமூகத் தேவைகள் மற்றும் முக்கியத்துவம் முதலியன வேலையின் தன்மை,வேலையின் வகைகள்,தகுதிகள்,பால்,வயது,உடல்நிலை,மனநிலை,போட்டி,சமூகச்சூழல்,ஆளுமைக்குணங்கள்,கல்வி சிறப்புத் தகுதிகள்,தொழில் நுட்பம்,உத்திரவாதம் போன்ற இன்னும் பிற வகைகளின் தேவைகள் மற்றும் தற்போதையத் தேவைகள்,அனுபவம்,வேலையில் சேருவதற்கான வழிமுறைகள்,வேலை செய்யும் விதம், நேரம்,தொடர்புடையத் தொழில்வருமானம்,நலம் மற்றும் பாதுகாப்புக் காரணிகள்,பணி தவறாமை,வேலை அமைந்துள்ள இடம்,உடன் வேலை செய்பவரின் தன்மைகள்,வேலை அமைந்துள்ள இடம்,போக்குவரத்துப் போன்ற பல்வேறு வழிகாட்டலும்,தகவல்களும் இன்றைய இளைஞர்களுக்கு அவசியம் தேவைப்படுகிறது.

2) அறிவு என்றால் என்ன?

2) அறிவு என்றால் என்ன?
     அறிவு என்பது உணர்தலாலும்,அனுபவத்தாலும்,கற்பதாலும் கிடைக்கப்பெறுபவைகளாகும்.அறிவு என்பது ஒருவருக்கு பிறப்பு முதல் இறப்பு வரை கிடைப்பவைகளாகவே உள்ளன.ஆனால் படித்தவர்களுக்கு மட்டுமேஅறிவு இருப்பது போன்றும்,அறிஞர்கள் என்றும் ஒரு தோற்றப்பாடு பொதுவாக எல்லோரிடமும் காணப்படுகின்றன.அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது. அறிவு விலங்குகள் உட்பட எல்லோருக்கும் உண்டு. அவற்றை இயற்கையறிவு,உணர்வறிவு,படிப்பறிவு, பட்டறிவு (அனுபவ அறிவு),கல்வியறிவு,தொழில்சார் அறிவு,பொது அறிவு,ஆழ்மனப்பதிவறிவு- என அறிவானது பலவகைகளாகப் பிரிக்கலாம்.

1)கேள்வி பதில் எதற்காக?

              அன்பு நண்பர்களே, வணக்கம்.
         

       இந்த வலைப்பதிவின் நோக்கம், எல்லாவித சந்தேகங்களுக்கும் பதில் கொடுக்கும் வலைத்தளம் ஆங்கிலத்தில் உள்ளது போல தமிழில் இல்லை!என்ற குறையைப் போக்கும்விதமாக மற்றும்
              நமது மாவட்டத்தின் கண் அனைத்துவிதமான அரசு துறைகள்,போக்குவரத்து ,  அரசு அலுவலகங்கள் உள்ள இடங்கள், இன்னும் பல விசயங்கள் பற்றி சாதாரண
          கிராம மக்களும் அறிந்து கொள்ளும்வகையில் பதிவிட வேண்டும் என்பதற்காக   
      கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவரும் எங்களது நண்பருமான திரு பொன்னுசுவாமி.Dஅவர்களது ஆலோசனையின் படி

             கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ,மாணவியரின் உதவியோடு   தமிழில் பதிலளிக்க முயற்சி செய்கிறோம்.
   
                   அனைவரின் ஆதரவுக்கு நன்றி!
 
     முயற்சி செய்வோம்! வெற்றி பெறு வோம்!!
             
                                                       இப்படிக்கு ,
                                       சமூக நலன் கருதி,
                தேனீக்கள் சமூக சேவை அமைப்பு என்னும்,
                   HONEY BEES SOCIAL ORGANIZATION-86 / 2010
                   SATHY & THALAVADI = [ ERODE - DISTRICT ]
                   தேதி; 24-06-2011 / FRI DAY.........